Search This Blog

Sunday, August 29, 2010

தந்தை பெரியார்

ஈ.வெ. ராமசாமி
Thanthai Periyar.jpg
வேறு பெயர்(கள்): ராமசாமி, ஈ.வெ.ரா., பெரியார், (அ) தந்தை பெரியார்
பிறப்பு: செப்டம்பர் 17 1879
பிறந்த இடம்: ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
இறப்பு: டிசம்பர் 24 1973 (அகவை 94)
இறந்த இடம்: வேலூர், தமிழ்நாடு, இந்தியா
இயக்கம்: சுயமரியாதை இயக்கம், தமிழ் தேசியவாதம்
முக்கிய அமைப்புகள்: இந்திய தேசிய காங்கிரஸ், நீதிக்கட்சி, திராவிடர் கழகம்
குறிப்பிடத்தக்க விருதுகள்: யுனஸ்கோ (1970)
மதம்: இறை மறுப்பாளர்
பெரியார் எனப் பரவலாக அறியப்படும் ஈ. வெ. ராமசாமி (E. V. Ramasamy, செப்டம்பர் 17, 1879 - டிசம்பர் 24, 1973) சமூக சீர்திருத்ததிற்காகவும், சாதி வேற்றுமையினை அகற்றுவதற்காகவும், மூடநம்பிக்கைகளை மக்களிடமிருந்து களைவதற்காகவும், பெண் விடுதலைக்காகவும் போராடியவர். தமிழகத்தின் மிக முக்கியமான இயக்கமாகக் கருதப்படும் திராவிடர் கழகத்தினைத் தோற்றுவித்தவர். இவருடைய சுயமரியாதை இயக்கமும், பகுத்தறிவுவாதமும் மிகவும் புகழ்பெற்றது. இவர் வசதியான, உயர்சாதியாகக் கருதப்பட்ட நாயக்கர் என்ற சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக் கொடுமை, தீண்டாமை, மூடநம்பிக்கை, வர்ணாஸ்ரம தர்மம் கடைப்பிடிக்கும் பார்ப்பனியம், பெண்களைத் தாழ்வாகக் கருதும் மனநிலை போன்றவற்றை எதிர்த்து மக்களுக்காகக் குரல் கொடுத்தார். இம்மனநிலை வளரக்கராணமானவை மக்களிடையே இருக்கும் மூடநம்பிக்கையே, அந்த மூடநம்பிக்கைக்கு காரணமாக இருப்பது கடவுள் நம்பிக்கை, கடவுள் பெயரால் உருவான சமயங்களும் தான் என்பதை கருத்தில் கொண்டு ஈ.வெ.ரா, தீவிர நாத்திகராக இருந்தார். இந்திய ஆரியர்களால், தென்னிந்தியாவின் பழம்பெருமைவாயந்த திராவிடர்களை பார்ப்பனரால்லாதார் என்ற ஒரு காரணத்தினால் புறக்கணிக்கப்படுவதையும், அவர்களால் திராவிடர்களின் வாழ்வுச் சுரண்டப்படுவதையும் பெரியார் எதிர்த்தார். அவர் தமிழ்ச் சமூகத்திற்காக செய்த புரட்சிகரமான செயல்கள், மண்டிகிடந்த சாதிய வேறுபாடுகளை குறிப்பிடத்தக்க வகையில் அகற்றியது. தமிழ் எழுத்துகளின் சீரமைவுக்கு பெரியார் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளார். இவரின் சமுதாயப் பங்களிப்பை பாராட்டி யூனஸ்கோ நிறுவனம் "புத்துலக தொலை நோக்காளர், தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி" என்று பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது
இவருடைய பகுத்தறிவு, சுயமரியாதை கொள்கைகள் தமிழ்நாட்டின் சமூகப் பரப்பிலும், தமிழக அரசியலிலும் பலத் தாக்கங்களை ஏற்படுத்தியவை.
இவர் ஈ.வெ.ரா, ஈ.வெ.ராமசாமி நாயக்கர், தந்தை பெரியார் என்ற பெயர்களாலும் அறியப்படுகிறார்.

பொருளடக்கம்

  • 1 வாழ்க்கை
    • 1.1 இளமைக் காலம்
    • 1.2 காசி யாத்திரை
    • 1.3 காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் (1919-1925)
    • 1.4 வைக்கம் போராட்டம் (1924-1925)
    • 1.5 சுயமரியாதை இயக்கம்
    • 1.6 வெளிநாடு சுற்றுப்பயணம் (1929-1932)
    • 1.7 இந்தி எதிர்ப்பு
    • 1.8 நீதிக்கட்சித் தலைவராக (1938-1944)
    • 1.9 திராவிடர் கழகம் (1944-முதல்)
      • 1.9.1 திராவிடர் கழகம் உருவாதல்
      • 1.9.2 அண்ணாதுரையுடன் கருத்து வேறுபாடு
    • 1.10 இறுதி காலம்
      • 1.10.1 மறைவு
  • 2 வாழ்க்கை வரலாறு
  • 3 நினைவகங்கள்

 வாழ்க்கை

 இளமைக் காலம்

பெரியார் செப்டம்பர் 17, 1879, ஈரோடு வெங்கட்ட ராமசாமி நாயக்கர் எனும் இயர் பெயர் கொண்டவராய் தமிழ்நாட்டிலுள்ள, ஈரோட்டில் பிறந்தார். இவரின் தந்தை வெங்கட்ட (நாயக்கர்) மிக வசதியான வணிக பின்னணியை கொண்டவர். இவரின் தாயார் முத்தம்மாள் என்ற இயற்பெயர் கொண்ட சின்ன தாயம்மாள் ஆவார். இவரின் உடன் பிறந்தோர் தமையனரான கிருஷ்ணசாமி, தமக்கைகள் கண்ணம்மா மற்றும் பொன்னுதாயி ஆவார்கள். பின்னாளில் இவர் தந்தை பெரியார் என மரியாதையுடன் தமிழர்களால் அன்புடன் அழைக்கப்பட்டார்.
1929, இல் பெரியார் சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் , தன் பெயரின் பின் வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்கு பின்னாள் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார். பெரியார் மூன்று திராவிட மொழிகளான தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைப் பேசும் ஆற்றல் பெற்றவராவார். அவரின் தாய்மொழி கன்னடம் ஆகும். பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை, ஐந்து வருடங்கள் மட்டுமே கல்வி பயின்றார். அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார். தன்தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் ப்ண்டிதரின் உபதேசங்களை கேட்கும்படி தன்தந்தையால் பெரியார் பணிக்கப்பட்டிருந்தார். அதன்படி அப்பண்டிதர் அளிக்கும் உபதேசங்களை மிக ஆர்வமுடனும், அவரின் இந்து புராண இலக்கிய உபதேசங்களில், புராணக் கதைகளில் எழுந்த சந்தேகந்தங்களையும் துடுக்குடன் அவ்விளவயதிலேயே வினவினார். அன்று எழுந்த கருத்து வேற்றுமைகளே பின்னாளில் இந்து ஆரிய எதிர்ப்புக் கோட்பாடுகளை மேற்கொள்ள வழிகோலின. பெரியார் வளரும்பொழுதே சமயம் என்பது அப்பாவி மக்களின் மீது வஞ்சகத்துடன், அவர்களை சுரண்டுவதற்காக போற்றபட்ட போர்வையாக போர்த்தப்பட்டுள்ளதை களையவேண்டுவது தனது தலையாய கடமை என்ற எண்ணத்தையும், மூடநம்பிக்கைகளிலிருந்தும், சமயகுருமார்களிடமிருந்தும் இம்மக்களை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தையும் வளர்த்துக்கொண்டார்.
பெரியாரின் 19 வது வயதில் அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர்களால் நிச்சயித்த வண்ணம் சிறு வயது முதல் நேசித்த, 13 வயது நாகம்மையாரை மணந்து கொண்டார். நாகம்மையார் தன் கணவரின் புரட்சிகரமான செயல்களுக்கு தன்னை முழுவதுமாக ஆட்படுத்திக்கொண்டார். இருவரும் இணைந்து பல போராட்டங்களிலும் ஈடுபடலானார்கள். திருமணமான இரு வருடங்கள் பெண் மகவை ஈன்றெடுத்தார், அக்குழந்தை ஐந்து மாதங்களிலேயே இறந்தது. அதன் பிறகு அவர்களுக்கு பிள்ளைப் பேறு இல்லை.

காசி யாத்திரை

1904 இல் பெரியார் இந்துக்களின் புனித தலமாக கருதப்படும் காசிக்கு யாத்திரிகராக காசிவிசுவநாதரை தரிசிக்க சென்றார், அங்கு நடக்கும் மனிதாபிமனமற்ற செயல்கள், பிச்சை எடுத்தல், கங்கை ஆற்றில் மிதக்கவிடப்படும் பிணங்கள் போன்ற அவலங்களையும், பிராமணர்களின் சுரண்டல்களையும் கண்ணுற்றவரானார்.
இதனிடையே காசியில் நடந்த ஒரு நிகழ்வு அவரின் எதிரிகால புரட்சிகர சிந்தனைக்கு வித்திட்டது. பிரமாணரல்லதார் வழங்கும் நிதியில் நடத்தப்படும் யாத்திரிகர் அன்னசத்திரத்தில் பெரியாருக்கு பிரமணரல்லாதார் என்ற நிலையில் உணவு வழங்க மறுக்கப்பட்டது. இந்நிலைகண்டு மிகவும் வருத்தவமுற்றவரானார் இருப்பினும் பசியின் கொடுமை தாளமாட்டாமல் பிரமாணர் போல் பூணூல் அணிந்து வலிந்து தன்னை ஒரு பிராமணர் என்று கூறிஉள்நுழையமுயன்றார். ஆனால் அவர்மீசை அவரைக் காட்டிக் கொடுத்துவிட்டது. பிராமணர் யாரும் இந்து சாத்திரத்தின்படி இவ்வளவு பெரிய மீசை வைத்திருப்பதில்லை என்று கோயில் காவலாளியால் வலிந்து தள்ளப்பட்டு வீதியில் விழுந்தார்.
பசித்தாளமால் வீதியின் குப்பைத்தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவுகளை வேறுவழியில்லாமல் உண்டு பசியைப் போக்கிகொண்டார். பிரமணரால்லாதார் கட்டிய அன்னசத்திரத்தில் பிரமணரல்லாதாருக்கு உணவு வழங்க பிரமணர்களால் மறுக்கப்படுகின்றதே என்ற நிலைமையை எண்ணி வருந்தினார். இந்து சமயத்தின் வேற்றுமை காணும் (வர்க்கபேத) உணர்வினை எதிர்க்கும் நோக்கத்தை அன்றே புனிதமான காசியில் தன்மனதில் இருத்திக்கொண்டார். அதன் விளைவாக அதுவரை இறைப்பற்றுள்ளவாரக இருந்த பெரியார் காசி யாத்திரைக்குப் பின் தன்னை ஒரு இறைமறுப்பாளராக (நாத்திகராக) மாற்றிக்கொண்டார்]].

காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர் (1919-1925)

பெரியார் 1919 ஆம் ஆண்டு தனது வணிகத்தொழிலை நிறுத்திவிட்டு காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். இணைவதற்கு முன் தான் வகித்து வந்த அனைத்து பொதுப்பதவிகளையும் விட்டு விலகினார். அவர் வகித்து வந்த முக்கியப் பதவிகளான ஈரோடு நகராட்சித் தலைவர் பதவியை துறந்தது மட்டுமில்லாது, தன்னை முழுமனத்துடன் காங்கிரசு பேரியக்கத்துக்காக ஒப்படைத்துக் கொண்டார். காந்தியின் கதர் ஆடையை அவரும் உடுத்திக் கொண்டதுமட்டுமில்லாமல், பிறரையும் உடுத்தும்படி செய்தார், கள்ளுக்கடைகளை மூட வலியுறுத்தி மறியல் செய்தார், வெளிநாட்டுத் துணிவகைகளை விற்பனை செய்யும் வணிகர்களுக்கு எதிராக மறியல்கள் நடத்தினார். தீண்டாமை அடியொடு ஒழித்தார். 1921 இல் ஈரோடு கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டமைக்காக பெரியார் நீதிமன்றத்தால் சிறைத்தண்டனைப் பெற்றார். அம்மறியலில் அவரும் அவர் துணைவி நாகம்மையார் மற்றும் அவர் தமக்கையார் கலந்து கொண்டனர். இதன் பலனாக அன்றைய ஆங்கில அரசு நிர்வாகத்தினர் உடனடியாக பணிந்தனர். மீண்டும் ஒத்துழையாமை மற்றும் மிதமாக மது குடித்தல் சட்டங்களை எதிர்த்து மறியல் செய்ததினால் கைது செய்யபட்டார். 1922 இல் பெரியார் சென்னை இராசதானியின் (மதராஸ் இராஜதானி) காங்கிரஸ் கட்சித் தலைவராக (தற்பொழுது -தமிழநாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் என்று பெயர்) தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன் பின்னர் நடைபெற்றத் திருப்பூர் கூட்டத்தில் அரசு பணிகளிலும், கல்வியிலும் இடஒதுக்கீட்டை அமல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை, காங்கிரஸ் கட்சி ஆங்கில அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என்பதை மிகத்தீவிரமாக முன்னிருத்தினார். அவரின் முயற்சி அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றுது. அதனால் 1925 இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார்.

 வைக்கம் போராட்டம் (1924-1925)


முதன்மைக் கட்டுரை: வைக்கம்
கேரளாவில் உள்ள வைக்கம் எனும் சிறிய நகரில் பின்னாளில் திருவாங்கூர் என்று மாற்றப்பட்ட நகரில் உள்ள கோயில்களில் தீண்டாமை கொடுமை நிலவியது. கோயில்களில் அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்கள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. கோயில் இருக்கும் விதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்த்து. 1924 இல் சாதி எதிர்ப்புகள் வலுத்திருந்த சமயமாதலால் சாதி எதிர்ப்பு (சத்தியாகிரகம்) போராட்டம் காந்திய வழியில் நடத்த வைக்கம் சிறந்த இடமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. ஏப்ரல் 14 அன்று பெரியார் அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் ஒன்றாக கலந்து கோண்டனர். இருவரும் கைது செய்யப்பட்டு தனித்தனி சிறையில் அடைக்கப்பட்டனர். காந்தியின் அறிவுறுத்தலின் படி இப் போராட்டத்தில் கேரளாவைச் சாரதாவர்கள், இந்து சமயம் சாராதவரகள் கலந்து கொள்ளவில்லை. பெரியார் கைது செய்யபட்ட போதிலும் பெரியாரின் தொண்டர்கள் கைவிடாது போராட்டத்தை தொடர்ந்ததால் இச்சட்டம் விலக்கிகொள்ளப்பட்டது. அதுமுதல் பெரியார் வைக்கம் வீரர் என தமிழ் மக்களால் அழைக்கப்படலானார். பல சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்ட பெரியாருக்கு கிடைக்காத பெயரும், புகழும் இப்போராட்டத்தின் மூலம் கிடத்தது சற்று மிகைப்படுத்தப்பட்டதாகவே அறிஞர்கள் கருதுகின்றனர்.

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கத்தின துவக்க காலத்தின் பொழுது பெரியார்
பெரியார் மற்றும் அவரின் தொண்டர்கள் தொடர்ந்து நெடுங்காலமாக அரசாங்கத்தினரிடம் சமுதாய ஏற்றத்தாழ்வுகளை நீக்க கோரி முனைப்புடன் செயல்பட்டு வந்தனர். பல்ர் இந்தியாவின் விடுதலைக்காக போராடிவந்தபொழுதிலும் இவர்கள் சமூக விடுதலைக்காகப் போராடி வந்தனர். சுயமரியாதை இயக்கம் ஆரம்பத்தில் பிரமணரல்லாதோர் தாம் பழம்பெரும் திராவிடர்கள் என்றப் பெருமையுடன் வாழவும், அதை உணரவும், நாம் யாருக்கும் அடிமையில்லை என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்டவும் உருவாக்கப்பட்டது.
சுயமரியாரியாதை இயக்கம் 1925 இல் பெரியாரால் தோற்றுவிக்கப்பட்டது. இதன் முக்கிய கொள்கை பரப்புரையாக, சமுதாயத்தின் ஏளனத்திக்குரிய மூடபழவழக்கங்களையும், பரம்பரை வழக்கங்களையும் பின்பற்றப்படுவதை தொடர்ந்து எதிர்க்கும் நிலையை எடுத்தது. மக்களை அறிவின்மையினிருந்து மீட்டெடுக்கவும், தெளிவுடையவர்களாக மாற்றவும் இதன் கொள்கைகள் வழிவகை செய்தன. பகுத்தறிவு சிந்தனையுடன் மக்களின் செயல்பாடுகள் இருக்க வலியுறுத்தின. பகுத்தறிவாளர்கள் பின்பற்றப்படவேண்டிய கடமைகளாக பலவற்றை இவ்வியக்கம் வலியுறுத்தியது.
  • சுயமரியாதையாளர்கள் பிரமாணப் புரோகிதரில்லா, சமயச்சடங்கில்லா திருமணங்கள் நடைபெற வலியுறுத்தினர்.
  • ஆணும், பெண்ணும் சமம், அவர்கள் வேறுபாடின்றி, சரிநிகர் சமமாக வாழும் முறையை வலியுறுத்தியது.
  • கலப்புத் திருமணமுறையையும், கைம்பெண் திருமணத்தையும் ஊக்கப்படுத்தியது.
  • அளவில்லா குழந்தைகள் பெறுவதை தடுத்து குடும்ப கட்டுபாட்டை 1920 களிலேயே இதை வலியுறுத்தியது.
  • கோயில்களில் சட்டத்திற்கு புறம்பாக பின்பற்றப்படும் தேவதாசி முறையையும் (பெண்களை கோயில் தாசிகளாக, பொது மகளிராக ஆக்கி அடிமைப்படுத்தும் முறை), குழந்தை திருமணத்தையும் தடை செய்தது.
  • இதனினும் முக்கிய கொள்கையாக அரசு நிருவாகப் பணி, கல்வி இவற்றில் இடவொதுக்கீடு முறையை கடைப்பிடிக்க மதராஸ் அரசு நிருவாகத்தை (தமிழ்நாடு உட்பட) 1928 லேயே வலியுறுத்தியது.
இந்த பரப்புரை மற்றும் தத்துவங்கள் முழுநேர செயல்பாடுகளாக பெரியார் 1925 இலிருந்து செயல்படுத்தி வந்தார். இதை பரப்புவதற்கு ஏதுவாக குடியரசு நாளிதழை 1925 முதல் துவக்கி அதுமுதல் பரப்பி வந்தார். ஆங்கிலத்தில் ரிவோல்ட் என்ற நாளிதழ் மூலம் ஆங்கிலம் மட்டுமே தெரிந்த மக்களுக்காக பிரசாரம் செய்தார். . சுயமரியாதை இயக்கம் வெகு வேகமாக மக்களிடையை வளர்ந்தது. மக்களின் ஆதரவையும் நீதிக்கட்சித் தலைவர்களின் மூலமாகப் பெற்றது. 1929 இல் சுயமரியாதையாளர்கள் மாநாட்டை பட்டுக்கோட்டையில் எஸ்.குருசாமி மேற்பார்வையில் மதராஸ் இராசதானி சார்பில் நடைபெற்றது. சுயமரியாதையாளர்களின் தலைமையை கே.வி.ஆழகிரிசாமி ஏற்றார். இம்மாநாட்டைத் தொடர்ந்து அன்றைய மதராஸ் இராசதானியின் பல மாவட்டங்களில் சுயமரியாதையாளர்களின் கூட்டங்கள் நடைபெற்றது. இதற்கான பயிற்சி பட்டறையாக, பயிற்சி களமாக ஈரோடு மாநகரம் செயல்பட்டது. இதன் நோக்கம் சமுதாய மறுமலர்ச்சிக்காக மட்டுமில்லாமல் சமுதாயப் புரட்சிக்காகவும், இதன் மூலம் விழிப்புணர்வு பெற்ற புதிய சமுதாயத்தை உருவாக்க வழி செய்தது.

வெளிநாடு சுற்றுப்பயணம் (1929-1932)

பெரியார் ரஷ்யசுற்றுபயணத்தின்பொழுது
1929 இல் முதல் வெளிநாட்டுப் பயணமாக மலேயாத் தமிழர்களின் அழைப்பை ஏற்று மனைவி நாகம்மாளுடன் கப்பலில் ஏறி மலேயாச் சென்றார் அங்கு சுமார் 50000 மக்களுக்கு மேற்பட்டுத் திரண்டு வரவேற்ற மக்களிடையே சுயமரியாதை கருத்துக்களை விளக்கிப் பேசினார். தைப்பிங், மலக்கா, கோலாலம்பூர், கங்கைப்பட்டாணி போன்ற இடங்களிலும் சென்று தமது கொள்கைகளை விளக்கி உரையாற்றினார். பின் சிங்கப்பூரில் சிங்கப்பூர் தமிழர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு டிசம்பர் 1931 இல் சக சுயமரியாதையாளர்களான எஸ்.ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் ஐரோப்பிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். எகிப்து, கிரிஸ், துருக்கி, ரஷ்யா, ஜெர்மனி, இங்கிலாந்து, ஸ்பெயின், பிரான்ஸ், மற்றும் போர்ச்சுகல் நாடுகளுக்கு 3 மாதம் வரை பயணம் மேற்கொண்டார். இந்த பயணங்களின் முடிவில் இந்தியா திரும்பும் வழியில் இலங்கைக்கும் பயணம் செய்தபின், 1932 நவம்பர் 1 அன்று இந்தியாத் திரும்பினார்.
இச்சுற்றுபயணங்கள் பெரியாரின் சுயமரியாதைக் கொள்கைளுக்கு மேலும் மெருகூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேலும் வலுவடையச் செய்தன. ரஷ்யாவின் பொதுவுடமைக் (கம்யூனிசம்) கொள்கை இவருடையக் கொள்கையை ஒத்ததாகவே இருந்தது. பலவிடங்களில் பெரியாரின் கருத்துக்கள் மார்க்சியத்தின் சமூகப் பொருளாதாரக் கருத்துக்களுடன் ஒத்துபோவதாக இருந்தது ஆனால் தனியார் முதலாளித்துவத்தை முற்றிலும் ஒழிப்பதில் உடன்பாடில்லை. பெரியார் திரும்பியதும் உடனே மார்க்சியத் தலைவர் எம்.சிங்காரவேலு செட்டியாருடன் சமூக அரசியல் கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார். இதன் மூலம் பெரியாரின் கொள்கை சோசலிசத்துடன் கூடிய சுயமரியாதைக் கொள்கையாக மாறிற்று. இதனால் தமிழகத்தில் பெரும் வளர்ச்சியையும் மிகப்பெரிய அரசியல் மாற்றத்தையும் உருவாக்கிட இதுவே காரணமாயிற்று.

இந்தி எதிர்ப்பு

இராஜாஜியுடன் பெரியார்
1937 இல் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாக பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்த்து போராட்டமாக வெடித்தது. நீதிக்கட்சியின் தமிழ் தேசியவாதிகளான சர்.ஏ.டி.பன்னீர் செல்வம் மற்றும் பெரியார் இப்போராட்டத்தினை முன்னின்று நடத்தினர். இப்போராட்டம் 1938 இல் பல்ர் கைது செய்யப்பட்டு சிறையில் இராஜாஜி அரசால்அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது. அதே வருடம் தமிழ்நாடு தமிழருக்கே என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது. இதை முதன்முதலில் முழக்கமிட்டவர் பெரியார், பள்ளிகளில் இந்தி திணிக்கப்படுவதை எதிர்த்து அவர் இவ்வாறு முழக்கமிட்டார். இது ஆரியர்கள், திராவிடர்களின் பண்பாடுகளை ஊடுருவிச் சிதைக்க திட்டமிடும், அபாயகரமான தந்திரச் செயல் என குறிப்பிட்டார். இந்தியை ஏற்றுக்கொளவது இந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களை பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும். இந்தி தமிழர்களின் முன்னேற்றத்தை தடுத்து நிறுத்துவது மட்டுமில்லாமல், அவர்கள் நெடுங்காலமாக பாதுகாத்துவரும் பண்பாட்டையும் சிதைத்து விடும். தமிழை இனிமேல் பயன்படுத்த முடியாத நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டுவிடுவார்கள் என்று பெரியார் வலியுறுத்தினார். தொடர்ந்து இந்தி எதிர்ப்பு போராட்டங்கள் 1948, 1952, மற்றும் 1965 ஆம் ஆண்டுகளில் நடந்தன.

நீதிக்கட்சித் தலைவராக (1938-1944)

தென்னிந்திய நலவுரிமைச் சங்கம் என்ற அரசியல் கட்சி 1916 ஆம் ஆண்டு துவக்கப்பட்டது. பிராமணர்களுக்கு எதிராகவும், அவர்களின் பொருளாதார மற்றும் அரசியல் ஆதிக்கத்திற்கு எதிராகவும் துவக்கப்பட்டது. இக்கட்சியே, பின்னாளில் நீதிக்கட்சி என பெயர்மாற்றம் பெற்றது. பிராமணர் அல்லாதவர்களின் சமூக நீதி காத்திடவும், அவர்களின் கல்வி, அரசு அதிகாரத்தில் பங்கெடுப்பு போன்றவற்றை வலியுறுத்துவதற்காகவும் உருவாக்கப்பட்டது. அக்கட்சி, பிரமணரல்லாதாரை அல்லது பார்ப்பனரால்லாதவர்களை ஒடுக்க, பிராமணர்கள் அல்லது பார்ப்பனர்கள் பின்பற்றி வந்த வர்ணாசிரம தத்துவத்தை முற்றிலும் எதிர்த்தது.
1937 இல் இந்தி கட்டாயப் பாடமாக மதராஸ் மாகாணப் பள்ளிகளில் அரசால் திணிக்கப்பட்டபோது, பெரியார் தனது எதிர்ப்பை நீதிக்கட்சியின் மூலம் வெளிப்படுத்தினார். 1937 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக திராவிட இயக்கத்திற்கு கணிசமான மாணவர்களின் ஆதரவு கிட்டியது. பின்னாட்களில் இந்தி எதிர்ப்பு தமிழக அரசியலில் பெரும் பங்கு வகித்தது. இந்தியை ஏற்றுக்கொள்வதால் தமிழர்கள் அடிமைப்படுவார்கள் என்ற காரணத்தால் முற்றிலும் எதிர்க்கப்பட்டது. நீதிக்கட்சிக்கு மிகுதியான மக்களாதரவு இல்லாததினால் மிகவும் நலிவடைந்திருந்தது. 1939]],இல் இந்தி எதிர்ப்பு போராட்டத்தினால் சிறை வைக்கப்பட்டிருந்த பெரியார் விடுதலையானதும் அக்கட்சித் தலைவர் பொறுப்பை ஏற்றார். அவரின் தலைமையில் கட்சி சிறப்புடன் வளர்ச்சி கண்டது. இருப்பினும், கட்சியின் பெரும்பாலான பொதுக்குழு உறுப்பினர்கள் கல்வியறிவு பெற்றவர்களாகவும், செல்வந்தர்களாகவும் இருந்தமையால் பலர் பெரியாரின் தலைமையின் கீழ் ஈடுபட மனமில்லாமல் கட்சியிலிருந்து விலகினர்.

திராவிடர் கழகம் (1944-முதல்)

திராவிடர் கழகம் உருவாதல்

1944 இல் நீதிக்கட்சித் தலைவராக பெரியார் முன்னின்று நடத்திய நீதிக்கடசிப் பேரணியில் திராவிடர் கழகம் எனப் பெரியாரால் பெயர் மாற்றப்பட்டு அன்று முதல் திராவிடர் கழகம் என அழைக்கப்பட்டது. இருப்பினும் பெரியார் நீதிக்கட்சியைத், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றியதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து மாற்று அணியை, நீதிக்கட்சியின் நீண்ட அனுபவமுள்ளவரான, பி.டி. ராஜன், தலைமையில் துவக்கப்பட்டு 1957 வரை அம்மாற்று அணி செயல்பட்டது.
திராவிடர் கழகத்தின் கொள்கை நகரமக்களிடமும், மாணவ சமுதாயத்தினரிடமும் வெகு விரைவாகப் பரவியது. இக்கட்சியின் கொள்கைகளும் இதன் சார்ந்த செய்திகளும் வெகு விரைவிலேயே கிராமத்தினரிடமும் பரவியது. பார்ப்பன புரோகிதர்களின் அடையாளங்களான இந்தி மற்றும் சமயச்சடங்குகள் தமிழ் பண்பாட்டுக்கு விரோதமானவை என அடையாளம் காணப்பட்டு விலக்கிவைக்கப்பட்டன. அவ்வடையாளங்களின் பாதுகாவலர்களாக விளங்கும் பார்ப்பனர்கள், இந்நிலையை எதிர்த்து வாய் மொழித் தாக்குதல்களை தொடுக்கலாயினர்  . 1949 முதல் திராவிடர் கழகம் தங்களை மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்களாகவும், சமூக சீர்திருத்தவாதிகளாகவும் சமூகத்தில் அடையாளப்படுத்தும் வகையில் செயல்படலாயினர். திராவிடர் கழகம் தலித்களுக்கு எதிராக பயன்படுத்தபடும் தீண்டாமையை மிகத்தீவிரமாக எதிர்ப்பதிலும், ஒழிப்பதிலும் முனைப்புடன் செயல்பட்டனர். பெண்கள் உரிமை, பெண் கல்வி, பெண்களின் விருப்பத்திருமணம், கைம்பெண் திருமணம், ஆதரவற்றோர் மற்றும் கருணை இல்லங்கள்  இவைகளில் தனிக்கவனம் செலுத்தினர்.

அண்ணாதுரையுடன் கருத்து வேறுபாடு

பெரியாருடன், அண்ணாதுரை
1949 இல் பெரியாரின் தலைமைத் தளபதியான கஞ்சிவரம் நடராசன் அண்ணாதுரை பெரியாரிடமிருந்து பிரிந்து திராவிட முன்னேற்றக் கழகம் (தி.மு.க) (Dravidan Progressive Federation), என்ற தனிக் கட்சியை ஆரம்பித்தார். இந்த பிரிவு பெரியார் மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் என்க கூறப்படுகின்றது. பெரியார் திராவிடநாடு அல்லது தனித்மிழ்நாடு கோரிக்கையை முன்வைத்தார் ஆனால் அண்ணாதுரை தில்லி அரசுடன் இணைக்கமாக இருந்து கொண்டு கூடுதல் அதிகாரங்களை கொண்ட மாநில சுயாட்சியைப் பெறுவதில் அக்கரை காட்டினார். அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர். பெரியார் தன்னுடைய கட்சியின் இலட்சியங்களாகவும், தனது இலட்சியங்களாகவும் முன்னிருத்திய சமுதாய மறுமலர்ச்சி, சமுதாய விழிப்புணர்வு, முடநம்பிக்கை ஒழிப்பு, கடவுள் மறுப்பு போன்றவற்றை அரசியல் காரணங்களுக்காக சிறிதும் விலகிநிற்க அல்லது விட்டு கொடுக்க அவர் விரும்பவில்லை. ஆகையால் பெரியார் தனது கட்சியை அரசியல் கட்சியாக மாற்ற விருப்பமில்லை என்பதை அவரின் கட்சியின் அதிருப்தியடைந்த தொண்டர்களிடமும், உறுப்பினர்களிடமும் தெரிவித்து அவர்களை சமாதானப்படுத்தினா. பெரியாரிடமிருந்து பிரிந்து போகும் தருணத்தை எதிர்பார்த்து காத்திருந்தவர்கள், ஜூலை 9, 1948 அன்று பெரியார், தன்னை விட 40 வயது இளையவரான மணியம்மையாரை மறுமணம் புரிந்த்தை காரணம் காட்டி கட்சியிலிருந்து அண்ணாதுரைத் தலைமையில் விலகினர்.
அண்ணாதுரை விலகும் பொழுது தன்னை அரசியலில் வளர்த்து ஆளாக்கியத் தலைவனை வணங்கி கண்ணிர்விட்டு பிரிகின்றோம் என்று கூறிப் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்த காரணத்தினால் பெரியார் அவர்களின் திமுக கட்சியை கண்ணீர்துளி கட்சி என அதுமுதல் வர்ணிக்கலானார்.

இறுதி காலம்

1956 இல் சென்னை மெரினாவில் இந்து கடவுளான ராமரின் உருவப்பட்ம் எரிப்பு போராட்டத்தை பெரியாருக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக இருந்த பி.கக்கன் அவர்களால் கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பெரியார் அப்போராட்டத்தினால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்
1958 இல் பெரியார் மற்றும் அவரது செயல்வீரர்கள் பெங்களூரில் நடைபெற்ற அனைத்திந்திய அலுவலக மொழி மாநாட்டில் கலந்துகொண்டனர். அம்மாநாட்டில் பெரியார் ஆங்கிலத்தை, இந்திக்கு மாற்றுதலான அலுவலக மொழியாக அரசாங்கத்திடம் வலியுறுத்திக் பெற்றுக்கொள்ள வலியுறுத்தினார். 1962 இல் பெரியார் தனது கட்சியான திராவிடர் கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக கி.வீரமணியை முழு நேரமும் கட்சிப் பொறுப்பை கவனிக்கும் விதத்தில் நியமித்தார். ஐந்தாண்டுகளுக்குப்பிறகு பெரியார் வடஇந்தியா சுற்றுப்பயணம் மூலம் சாதியங்களை ஒழிக்கப் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின் இறுதி கால நெருக்கத்தில் அவருக்கு யுனஸ்கோ விருது இந்திய கல்வி அமைச்சர் , திரிகுனா சென் அவர்களால் சென்னையில் (மதராசில்), ஜூன் 27, 1973 அன்று வழங்கப்பட்டது.

 மறைவு

பெரியாரின் கடைசி கூட்டம் சென்னை, தியாகராய நகரில், டிசம்பர் 19, 1973 அன்று கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் சமுதாயத்தில் அனைவரும் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துகொண்டார். அதுவே அவரின் கடைசிபேச்சு ஆகும். குடலிறக்க நோயினால் பெரும் அவதியுற்றப் பெரியார், வேலூர் சி.எம்.சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உலகின் மாபெரும் சுயசிந்தனையாளரும், உறுதியான பகுத்தறிவுச் சிற்பி என அனைவராலும் போற்றப்பட்ட பெரியார், சிகிச்சை பலனின்றி டிசம்பர் 24, 1973 அன்று தனது 94 ஆம் வயதில் இயற்கை எய்தினார்.

வாழ்க்கை வரலாறு

  • 1879 : செப்டெம்பர் 17, ஈரோட்டில் பிறந்தார். பெற்றோர்: சின்னத்தாயம்மை-வெங்கட்ட நாயக்கர்
  • 1885 : திண்ணைப்பள்ளியில் சேர்ந்தார்.
  • 1891: பள்ளிப்படிப்பை விட்டு நிறுத்தப்பட்டார்
  • 1892 : வாணிபத்தில் ஈடுபட்டார்
  • 1898 : நாகம்மையை (அகவை-13) மணந்தார்.
  • 1902 : கலப்புத்திருமணங்களை நடத்திவைத்தார். அனைத்து சமயத்தினர், சாதியினருடன் சேர்ந்து விருந்துண்டார்.
  • 1904 : ஒரு பெண் குழந்தைக்கு தந்தையானார். (அக்குழந்தை ஐந்தாம் மாதத்தில் இறந்தது. பின்னர் குழந்தையே இல்லை.)
  • 1907 : பேராய இயக்கத்தில் நாட்டம் கொண்டார். ஈரோட்டில் கக்கல் கழிச்சல் நோய் பரவியபோது, யாரும் உதவிக்கு முன்வராத நிலையில் துணிந்து மீட்புப்பணியாற்றினார்.
  • 1909 : எதிர்ப்புக்கிடையில் தங்கையின் மகளுக்கு கைம்மைத் திருமணம் செய்துவைத்தார்.
  • 1911 : தந்தையார் மறைவு
  • 1917 : ஈரோடு நகரமன்றத்தின் தலைவரானார்.

நினைவகங்கள்

தமிழ்நாடு அரசு ஈ.வெ.ராமசாமி நினைவைப் போற்றும் வகையில் அவர் வாழ்ந்த ஈரோடு இல்லத்தை பெரியார் - அண்ணா நினைவு இல்லமாக்கியுள்ளது. இங்கு தந்தை பெரியாரின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் அவர் போராட்டம் நடத்திய வைக்கம் இடத்தில் தந்தைபெரியார் நினைவகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு தந்தை பெரியார் அவர்களின் உட்கார்ந்த நிலையிலான நான்குஅடி உயர திருஉருவச்சிலை அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது. நூல் நிலையம் உள்ளது.
----------------------------------------------------------------------------------------------------------

Thursday, August 26, 2010

திலீபன்

திலீபன்
பார்த்திபன் இராசையா
திலீபன்.jpg
அமைப்பு தமிழீழ விடுதலைப் புலிகள்
பிறப்பு நவம்பர் 27, 1963
பிறந்த இடம் ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை
நோன்பு ஆரம்பம் செப்டம்பர் 15, 1987
இறப்பு செப்டெம்பர் 26, 1987
(அகவை 23)
நோன்பிருந்த நாட்கள் 12  
பார்த்திபன் இராசையா (நவம்பர் 27, 1963 - செப்டெம்பர் 26, 1987; ஊரெழு, யாழ்ப்பாணம், இலங்கை) என்ற இயற்பெயரை கொண்ட லெப்டினன் கேணல் திலீபன் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒரு முக்கிய உறுப்பினராக இருந்தவர். இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து காந்திய வழியில் நீரும் அருந்தா உண்ணாவிரதம் இருந்து, அக்கோரிக்கைகள் நிறைவேற்றாப்படா சமயம் உறுதியுடன் அவ் உண்ணாவிரதத்தில் உயிர்துறந்தவர். இவரை இந்திய அரசு இறக்க விட்டது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இந்திய இராணுவத்துக்குமிடையே பின்னர் ஏற்பட்ட போருக்கு ஒரு முக்கிய காரணம்.
1987 செப்டெம்பர் 15ஆம் திகதி ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதத்தை ஆரம்பித்தார். 1987ஆம் ஆண்டு செப்டெம்பர் 26ஆம் திகதி சனிக்கிழமை காலை 10.48 மணிக்கு லெப்டினன் கேணலாக, யாழ்.மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன் தியாக மரணம் எய்தினார்.

ஐந்து அம்சக் கோரிக்கை

  1. மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.
  2. சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.
  3. அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும்.
  4. ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.
  5. தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்படவேண்டும்.

Wednesday, August 25, 2010

செந்தமிழன் சீமான்



சீமான் தமிழ்ப் பாதுகாப்பு இயக்க முன்னணி செயற்பாட்டாளர்களில் ஒருவரும், அறியப்பெற்ற தமிழ்த் திரைப்பட இயக்குநரும் ஆவார். சில திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றியுள்ளார். இவர் தனது நேரடியான உணர்ச்சிபூர்வமான கருத்துச் செறிவு மிக்க பேச்சாற்றலால் உலகத் தமிழர்கள் பலரின் கவனத்தைப் பெற்றவர். சமூக அக்கறை வேண்டிய தளங்களைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதில் இவர் பணி குறிப்பிடத்தக்கது.
                             --------------------------

Monday, August 23, 2010

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்


Bose.jpg
ிறப்பு: ஜனவரி 23 1897
Cuttack, Bengal Presidency, British India
இறப்பு: 18 August 1945 (presumed)
Taiwan
தேசியம்; Indian
வேறு பெயர்கள்: நேதாஜி
அறியப்படுவது: Prominent Figure of Indian independence movement activism and reorganizing and leading the Indian National Army in World War II
பட்டம்: Head of Azad Hind
Ceremonial chief of Indian National Army
அரசியல் கட்சி: Indian National Congress, Forward Bloc
சமயம்: Hinduism
பெற்றோர்: Janakinath Bose
Prabhavati Devi
வாழ்க்கைத்
துணை :

Emilie Schenkl
பிள்ளைகள்: Anita Bose Pfaff
நேதாஜி (தலைவர்) என்று இந்திய மக்களால் மரியாதையுடன் அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் (ஜனவரி 23, 1897 - ஆகஸ்ட் 18 1945) இந்திய சுதந்திரப் போராட்டத் தலைவராவார். இரண்டாம் உலகப் போர் சமயத்தில் வெளிநாடுகளில் போர்க் கைதிகளாய் இருந்த நூற்றுக்கணக்கான இந்தியர்களை ஒன்றுதிரட்டி இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கி அப்போது இந்தியாவை ஆட்சி செய்த ஆங்கிலேயர்க்கு எதிராக தாக்குதல் நடத்தியவர்.
இவர் 1945 ஆகஸ்ட் 18 அன்று தைவான் நாட்டில் ஒரு விமான விபத்தில் இறந்து விட்டதாக கருதப்பட்டாலும், அவர் அப்போது இறக்கவில்லை என்பதற்கு பல சான்றுகள் உள்ளன. அவர் ரஷ்யாவிற்கு சென்று 1970களில் இறந்துவிட்டதாகவும், அல்லது ஒரு சன்னியாசியின் வடிவில் வட இந்தியாவில் மறைமுகமாக வாழ்ந்து 1985இல் இறந்து விட்டதாகவும் பல கருத்துக்கள் உள்ளன. 1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 14 முதல் செப்டம்பர் 20 வரை எந்த விமான விபத்தும் தைவானில் ஏற்படவில்லை என அந்நாட்டு அரசு தெரிவித்திருப்பது போல் அவ்வாண்டு இறக்கவில்லை என்ற வாதத்திற்கு வலுவூட்டியுள்ளது. இந்திய அரசால் நியமிக்கப்பட்டு இதைப்பற்றி விசாரித்து வரும் முகர்ஜி கமிஷன், தன் இறுதி அறிக்கையை 2005 நவம்பரில் வெளியிடும் என்று தெரிகிறது.
சுபாஷ் சந்திர போஸ் 1897 ஆம் வருடம் இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில்லுள்ள கட்டாக் என்ற இடத்தில் பிறந்தார். இவரது தந்தையார் ஜானகிநாத் போஸ். போஸ் ராகின்சேவ் காலேஜ் ஸ்கூல் - கட்டாக், ஸ்காடிஷ் சர்ச் ஸ்கூல், கல்கட்டா மற்றும் பிட்ஷ்வில்லியம் காலேஜ் ஆகிய இடங்களில் படித்தார். 1920 இல் இந்திய மக்கள் சேவை படிப்புக்கான நுழைவுத்தேர்வில் பங்கேற்ற அவர் இந்தியாவிலேயே நான்காவதாக வந்தார். எனினும் ஏப்ரல் 1891 இல் மதிப்புமிக்க இந்திய மக்கள் சேவையிலிருந்து வெளியேறிய அவர் இந்திய சுதந்திர போரட்டத்தில் பங்கேற்றார்.
-------------------------------------------------------------------------------------------@-----------------

காமராஜர்( பெருந்தலைவர்)

குமாரசாமி காமராஜர்
பிறப்பு ஜூலை 15 1903
விருதுநகர் சென்னை மாகாணம் ,இந்தியா
இறப்பு அக்டோபர் 2 1975 (அகவை 72)
சென்னை தமிழ்நாடு  இந்தியாவின் கொடி
தேசியம் தமிழர்
குமாரசாமி காமராஜ் பொதுவாக காமராஜர் அல்லது காமராசர் தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர்களுள் ஒருவர் ஆவார். 1954 ஆம் ஆண்டு் அப்போதைய சென்னை மாகாணத்தின் முதலமைச்சர் ஆனார். இவர் 9 ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராக பதவி வகித்தார். தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். காமராஜ் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர். இவர், தென்னாட்டு காந்தி, படிக்காத மேதை, பெருந்தலைவர் என்றெல்லாம் புகழப்படுகிறார். இவர் இறந்த பிறகு 1976 இல் இவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப் பட்டது. சென்னை உள்நாட்டு விமான நிலையத்திற்கு இவர் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

பொருளடக்கம்

  • 1 தொடக்ககால வாழ்க்கை
  • 2 சிறை வாழ்க்கையும் படிப்பும்
  • 3 அரசியல் குரு
  • 4 தமிழக அரசியல்

    • 4.1 தமிழக ஆட்சிப் பொறுப்பு
    • 4.2 வித்தியாசமான அமைச்சரவை
    • 4.3 முதலமைச்சராக ஆற்றிய பணிகள்
  • 5 அகிலஇந்திய காங்கிரஸ் தலைமை
  • 6 இறுதிக் காலம்
  • 7 நினைவுச் சின்னங்கள்
  • 8 திரைப்படங்கள்
  • 9 காமராஜ் பற்றிய ஏனையவரது கருத்துக்கள

தொடக்ககால வாழ்க்கை

காமராஜர் விருதுநகர் மாவட்டத்திலுள்ள விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு ஜூலை 15ஆம் தேதி பிறந்தார். அவருடைய பெற்றோர் குமாரசாமி நாடார் மற்றும் சிவகாமி அம்மாள் ஆவார்கள். அவருக்கு குல தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராஜா" என்றே அழைத்து வந்தாள். நாளடைவில் காமாட்சி என்ற பெயர் மாறி, ‘காமராஜ்’ என்று ஆனது.
தனது பள்ளி படிப்பை க்ஷத்ரிய வித்யா சாலா பள்ளியில் துவங்கினார். படிக்கும் போதே மிகவும் பொறுமையுடனும் விட்டு கொடுக்கும் மனதுடனும் விளங்கினார். மிகவும் சிறிய வயதிலேயே தந்தையை இழக்கும் துர்பாக்கிய நிலை காமராஜருக்கு ஏற்பட்டது. அவருக்கு ஆறுவயதாக இருந்த போது தந்தை குமாரசாமி நாடார் மறைவெய்திவிட்டார். ஆறாம் வகுப்பு வரையே படித்தார் இவர்.
சிவகாமி அம்மாளுக்கு இரண்டு சகோதரர்கள். ஒருவர் கருப்பையா நாடார். - இவர் துணிக்கடை வைத்திருந்தார். மற்றொருவர் பெயர் காசிநாராயண நாடார். இவர் திருவனந்தபுரத்திலே மரக்கடை வைத்து நடத்தி வந்தார்.

சிறை வாழ்க்கையும் படிப்பும்

பள்ளிப்படிப்பைத் தொடரமுடியாத நிலை ஏற்பட்டதும் காமராஜர் தன் மாமாவின் துணிக்கடையில் வேலையில் அமர்ந்தார். அங்கிருக்கும் போது பெ. வரதராஜுலு நாயுடு போன்ற தேசத் தலைவர்களின் பேச்சுக்களில் கவரப்பட்டு அரசியலிலும் சுதந்திரப் போராட்டங்களிலும் ஆரவம் காட்டினார். தன்னுடைய 16ஆம் வயதில் தன்னைக் காங்கிரஸின் உறுப்பினராகவே ஆக்கிக் கொண்டார்.
ராஜாஜியின் தலைமையில் 1930 மார்ச் மாதம், வேதாரண்யத்தில் உப்பு சத்தியாக்கிரகம் நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டார். அதற்காகக் காமராஜ் கைது செய்யப்பட்டு கல்கத்தா அலிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்டார். அடுத்த ஆண்டு காந்தி-இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். விருதுநகர் வெடிகுண்டு வழக்கில் கைதாகி, சேலம் டாக்டர் பெ. வரதராஜுலு நாயுடு அவர்களின் வாத திறமையால் குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் விடுதலை ஆனார். 1940-ல் மீண்டும் கைதாகி வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார். அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒன்பது மாதங்களுக்குப் பின் விடுதலை ஆனதும் நேராகச் சென்று தன் பதவியை ராஜினாமா செய்தார். பதவிக்கு நேர்மையாக முழுமையாகக் கடமையாற்ற முடியாத நிலையில் அதில் ஒட்டிக் கொண்டிருப்பது தவறு என்பது அவருடைய கொள்கையாக இருந்தது. மீண்டும் 1942-ல் ஆகஸ்ட் புரட்சி நடவடிக்கைகளுக்காக கைது செய்யப்பட்டார். இந்த முறை மூன்று ஆண்டுகள் தண்டனையாக அமராவதி சிறைக்கு அனுப்பப்பட்டார்.
இந்த மாதிரியான சிறை வாழ்க்கைகளின் போது தான் காமராஜ் சுயமாகப் படித்துத் தன் கல்விஅறிவை வளர்த்துக் கொண்டார்.

 அரசியல் குரு

மிகச் சிறந்த பேச்சாளரும் சிறந்த நாடாளுமன்ற வாதியும் ஆன சத்தியமூர்த்தி அவர்களைத் தான் காமராஜர் தன் அரசியல் குருவாக ஏற்றுக் கொண்டிருந்தார். 1936-ல்சத்தியமூர்த்தி பிரதேச காங்கிரசின் தலைவரான போது காமராஜரைச் செயலாளராக ஆக்கினார். இருவரின் முயற்சியில் காங்கிரஸ் கட்சி நல்ல வளர்ச்சி கண்டு தேர்தல்களில் பெருவெற்றி பெற்றது. இந்தியா சுதந்திரம் அடைந்த செய்தி கேட்டு காமராஜர் முதலில் சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அங்கு தான் தேசியக் கொடியை ஏற்றினார். அதேபோல் முதலமைச்சர் ஆனபோதும் முதலில்சத்தியமூர்த்தியின் வீட்டுக்குச் சென்று அவர் படத்துக்கு மாலை அணிவித்து விட்டுத் தான் தன் பணியைத் தொடங்கினார்.

 தமிழக அரசியல்

 தமிழக ஆட்சிப் பொறுப்பு

1953-க்குப் பிறகு சக்ரவர்த்தி ராஜாஜிக்கு அவர் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தால் அதிக அளவில் எதிர்ப்புகள் கிளம்பி இருந்த நேரம். காமராஜர் ஆட்சித் தலைமைப் பொறுப்புக்கு வரத் தயங்கியதற்கு அவருக்கிருந்த மொழிவளம் குறித்த தாழ்வுணர்ச்சி ஒரு முக்கிய காரணம். (அப்போது தமிழகம் சென்னை ராஜ்ஜியமாக ஆந்திராவின் பெரும்பகுதி, கர்நாடகாவின் சில பகுதிகள் ஆகியவற்றைத் தன்னகத்தே கொண்டிருந்தது)
குலக்கல்வித் திட்டத்தால் ராஜாஜியின் செல்வாக்கு வேகமாகக் கீழிறங்கிக் கொண்டிருக்க, மொழிவாரி மாநிலங்கள் அமைப்பின் காரணமாக (அக்டோபர் 1, 1953-ல் ஆந்திரா பிறந்து விட்டது) தமிழ்நாடும் சுருங்கிப் போக, காங்கிரஸின் உள்ளேயே ராஜாஜிக்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பி விட்டது. நிலைமை அறிந்த கட்சி மேலிடம், தமிழக அளவில் தீர்மானித்துக் கொள்ள அனுமதி வழங்கி விட்டது. ராஜாஜி தான் அவமானப்படுவதைத் தவிர்க்க, ‘எனக்கு எதிராகக் கட்சியில் யாரும் தீர்மானம் கொண்டு வர வேண்டாம்; நானே விலகிக் கொள்கிறேன்’ என்று அறிவித்து விட்டாலும் தன் இடத்திற்குத் தன்னுடைய முக்கிய ஆதரவாளரான சி.சுப்பிரமணியத்தை முன்னிறுத்த பின் வேலை செய்தார். அவருடைய இன்னொரு முக்கிய ஆதரவாளரான எம். பக்தவத்சலம் அதனை முன்மொழிந்தார்.
ஆனால் கட்சிசட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் காமராஜர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதுதான், காமராஜர் தமிழக முதல்வராக 1953 தமிழ்ப்புத்தாண்டு அன்று முதல்வரானதன் பின்னணி.

வித்தியாசமான அமைச்சரவை

காமராஜர் அமைச்சரவை அமைத்த விதத்தில் சில நுட்பமான விஷயங்கள் உள்ளன:
  • மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே (8 பேர்)அமைச்சர்கள் இருந்தனர்.
  • தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சி.சுப்பிரமணியம், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலம் இருவரையுமே அமைச்சரவையில் சேர்த்திருந்தார்.
  • அவருடைய அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த இன்னும் முக்கிய இருவர், ராமசாமி படையாச்சி, மாணிக்க வேலு நாயக்கர் ஆகியோர். இவர்கள் இருவரும் காங்கிரசை எதிர்த்துப் போட்டியிட்டு திமுக ஆதரவோடு வென்றவர்கள். (1952 தேர்தலில் திமுக போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. திமுகவின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; திமுக வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன் என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்து பூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்து காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று எம் எல் ஏ ஆனவர்கள் இந்த இருவரும்.)
  • அமைச்சரவையின் இன்னொரு குறிப்பிடத்தக்க அம்சம், பி.பரமேஸ்வரன் என்கிற அமைச்சர். அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை. (தாழ்த்தப்பட்டோர் கோவில்களில் நுழையவே எதிர்ப்பும் அனுமதி இன்மையும் இருந்த நாட்களில், தாழ்த்தப்பட்ட ஒருவர் அமைச்சர் என்கிற போர்வையில் போகும் போது பூரண கும்ப மரியாதை தரப்படுவதற்கு, ஆர்ப்பாட்டமில்லாமல் காமராஜர் செய்த ஒரு புரட்சி இது).

 முதலமைச்சராக ஆற்றிய பணிகள்

ராஜாஜி கொண்டு வந்திருந்த 'குலக்கல்வித் திட்டத்'தினைக் கைவிட்டதும், அவர் காலத்தில் நிதிநிலையைக் காரணம் கட்டி மூடப்பட்டிருந்த 6000 பள்ளிகளைத் திறந்ததும், மேற்கொண்டு 12000 புதிய பள்ளிகளைத் தோற்றுவித்ததும் காமராஜரின் தலைசிறந்த பணிகளாகும். அவரது ஆட்சிக் காலத்திற்குள் தமிழகத்தில் பள்ளிகளின் எண்ணிக்கை 27000 ஆனது. அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும். அதன் பலனாக பள்ளிகளில் படிப்போரின் எண்ணிக்கை 37 சதவீதமாக உயர்ந்தது. (வெள்ளையர் காலத்தில் இது 7 சதவீதமாக இருந்தது). பள்ளிகளில் வேலைநாட்கள் 180-லிருந்து 200 ஆக உயர்த்தப்பட்டது. சென்னை இந்தியத் தொழில்நுட்ப நிறுவனம் (IIT) தொடங்கப் பட்டது.
காமராஜ் முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார். அவரது ஆட்சியின் கீழ் 9 முக்கிய நீர்பாசனதிட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவை கீழ் பவானித்திட்டம், மேட்டூர் கால்வாய்த்திட்டம், காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம், மணிமுத்தாறு, அமராவதி, வைகை, சாத்தனூர், கிருஷ்ணகிரி, ஆரணியாறு ஆகியவையாகும்.
அவர் காலத்தில் தமிழகத்தில் தொடங்கப்பட்ட முக்கிய பொதுத் துறை நிறுவனங்களும் பெருந்தொழிற்சாலைகளும்:
  • பாரத கனரக மின் நிறுவனம் (BHEL)
  • நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் (NLC)
  • மணலி சென்னை சுத்திகரிப்பு நிலையம் (MRL இதன் தற்போதைய பெயர் CPCL)
  • இரயில் பெட்டி தொழிற்சாலை (ICF)
  • நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
  • கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
  • மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
குந்தா மின் திட்டமும், நெய்வேலி மற்றும் ஊட்டி ஆகிய இடங்களின் வெப்ப மின் திட்டங்களும் காமராஜரால் ஏற்படுத்தப்பட்டவை.

 அகிலஇந்திய காங்கிரஸ் தலைமை

மூன்று முறை (1954-57, 1957-62, 1962-63) முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த காமராஜர் பதவியை விட தேசப்பணியும் கட்சிப்பணியுமே முக்கியம் என்பதை மக்களுக்கும் குறிப்பாக கட்சித் தொண்டர்களுக்கும் காட்ட விரும்பி கொண்டு வந்த திட்டம் தான் K-PLAN எனப்படும் 'காமராஜர் திட்டம்' ஆகும். அதன்படி கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை இளையவர்களிடம் ஒப்படைத்து விட்டு கட்சிப்பணியாற்றச் செல்ல வேண்டும் என்று இவர் நேருவிடம் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டார் நேரு. இந்தத் திட்டத்தை முன்மொழிந்த கையோடு தன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்து (02.10.1963) பொறுப்பினை பக்தவத்சலம் அவர்களிடம் ஒப்படைத்து விட்டு டெல்லி சென்றார் காமராஜர். அக்டோபர் 9-ஆம் நாள் அகில இந்தியக் காங்கிரஸின் தலைவர் ஆனார். லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், எஸ்.கே.பாட்டீல், ஜெகஜீவன்ராம் போன்றோர் அவ்வாறு பதவி துறந்தவர்களில் முக்கியமானவர்கள்.
அகில இந்திய அளவில் காமராஜாரின் செல்வாக்கு கட்சியினரிடம் மரியாதைக்குரியதாக இருந்தது. அதனாலேயே 1964-ல் ஜவஹர்லால் நேரு மரணமடைந்தவுடன் இந்தியாவின் பிரதமராக லால் பகதூர் சாஸ்திரி அவர்களை முன்மொழிந்து காமராஜர் சொன்ன கருத்தினை அனைவரும் ஏற்றனர். 1966-ல் லால் பகதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தின் போது ஏற்பட்ட அசாதாரண அரசியல் சூழ்நிலையின் போது இந்திரா காந்தியை பிரதமராக வரச் செய்ததில் காமராஜருக்குக் கணிசமான பங்கு இருந்தது.

இறுதிக் காலம்

காமராஜருக்கு இந்திராகாந்தியுடன் ஏற்பட்ட பிணக்கின் காரணமாக காங்கிரஸ் கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டது. காமராஜரின் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரஸ் தமிழக அளவில் செல்வாக்குடன் திகழ்ந்தது. ஆனாலும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அபரிமித வளர்ச்சியால் அதன் பலம் குன்றிப் போக காமராஜர் தன்னுடைய அரசியல் பயணத்தைத் தமிழக அளவில் சுருக்கிக் கொண்டார். தமிழக ஆட்சியாளர்களின் தவறுகளைச் சுட்டிக் காட்டி வந்தார். இந்திராகாந்தி நெருக்கடி நிலையினை அமல் செய்தபோது அதனைக் கடுமையாக எதிர்த்தவர்களில் காமராஜரும் ஒருவர். இந்தியாவின் அரசியல் போக்கு குறித்து மிகுந்த அதிருப்தியும் கவலையும் கொண்டிருந்த நிலையில் 1975 அக்டோபர் திங்கள் இரண்டாம் நாள் (காந்தியின் பிறந்தநாள்) உறக்கத்திலேயே அவரின் உயிர் பிரிந்தது.

 நினைவுச் சின்னங்கள்

தமிழ்நாடு அரசு காமராசர் நினைவைப் போற்றும் வகையில் சென்னை கிண்டியில் அவருக்கு பெருந்தலைவர் காமராஜர் நினவிடம் ஒன்றை அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரியில் பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம் ஒன்றையும் அமைத்துள்ளது. இங்கு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் பொதுமக்கள் பார்வைக்குக் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. 

திரைப்படங்கள்

2004-ஆம் ஆண்டு காமராஜ் என்கிற பெயரில் அவருடைய வாழ்க்கை வரலாற்றினைச் சித்தரிக்கும் திரைப்படம் வெளியானது. அதன் ஆங்கில மொழியாக்க குறுந்தகடு 2007-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.

காமராஜ் பற்றிய ஏனையவரது கருத்துக்கள்

  • "திறமை, நல்லாட்சி, இவைகளுக்கு எடுத்துக்காட்டாக இருக்கும் ஒரு அரசாங்கத்திற்குத் தலைவர் என்ற முறையில் காமராஜர் சென்னை முதல்_அமைச்சராக இருக்கிறார். மக்களுக்கு மேலும் மேலும் தொண்டுபுரிய அவர் நீண்ட காலம் வாழ்வார் என நான் நம்புகிறேன். -நேரு
  • “சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன. இதற்கு காரணம் நமது காமராஜர்தான். ஊர்தோறும் சாரம் தொழில்வளம் ஏற்பட்டுள்ளன. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை சாதித்த நமது காமராஜரின் அறிவுத்திறனை மறுக்க முடியுமா?"- தந்தை பெரியார்.
  • “காமராஜ் தோற்றத்தில் மட்டுமின்றி மதிநுட்பத்திலும் மக்களையும், அவர்களுடைய பிரச்சினகளையும் புரிந்து கொள்வதிலும் அப்பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதிலும் நாட்டம் மிகுந்த தலைவராக விளங்குகிறார்.”-இந்திரா காந்தி
  • "சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராஜை நான் பிள்ளையாக பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன்."- சிதம்பரம் சுப்ரமண்யம்
  • "காமராஜர் என் தலைவர், அண்ணா என் வழிகாட்டி"- எம். ஜி. இராமச்சந்திரன்
  • "தியாகச் சுடர், தமிழ் மக்களின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றவர்."-கலைஞர் கருணாநிதி
  • "காமராஜர் அரசு பிற மாநிலங்களுக்கு ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. முற்போக்கு அரசியலிலும், ஸ்திரமான சர்க்காரிலும், நிர்வாகத்திறமையிலும் தமிழகம் ஒரு வழிகாட்டியாக இருக்கிறது."-மத்திய உணவு அமைச்சர் ஏ.எம்.தாமஸ்
  • “தனது பலவித கஷ்டங்களையும் பொருட்படுத்தாது, சதா காலமும் நாட்டின் நலன்களிலே ஈடுபட்டுள்ள உள்ளத்தைப் பெற்றவரே சகல தர்மங்களையும், நிதிகளையும் நன்குணர்ந்தவரே காமராஜ், காமராஜ் மகாபுருஷர்.”-காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி 
            ----------------------------------------------------------------------------------------------------------


    ம.கோ.இராமச்சந்திரன்(MGR)

    மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன்
    Mgr4R.jpg

    பிறப்பு ஜனவரி 17, 1917
    நாவலப்பிட்டி,  இலங்கை
    இறப்பு டிசம்பர் 24, 1987
    தமிழ்நாடு, இந்தியாவின் கொடி இந்தியா
    தொழில் நடிகர், அரசியல்வாதி
    வாழ்க்கைத்
    துணை

    தங்கமணி, சதானந்தவதி, வி. என். ஜானகி
    பிள்ளைகள் கிடையாது

    எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் (ஜனவரி 17, 1917 - டிசம்பர் 24, 1987), தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர்.

    பொருளடக்கம்

    • 1 இளமைப்பருவம்
    • 2 திரைப்பட வாழ்க்கை
    • 3 அரசியல் வாழ்க்கை
    • 4 தமிழ் ஈழத்திற்கு உதவி

    இளமைப்பருவம்

    இராமச்சந்திரன் இலங்கையின் கண்டிக்கு அருகேயுள்ள நாவலப்பிட்டியில் மருதூர் கோபாலமேனனுக்கும் சத்தியபாமாவுக்கும் மகனாகப் பிறந்தார்.[1][2] அவருடைய தந்தையின் மறைவுக்குப் பின்னர் தமிழ்நாட்டின் கும்பகோணத்தில் குடியேறினார். குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். நாடகத்துறையில் நன்குப் அனுபவமான நிலைமையில் திரைப்படத்துரைக்குச் சென்றார். திரைப்படத்துரையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேரி நடிகரானார். இவரது நடிப்பு பெரும் எண்ணிகையிலான மக்களைக் கவர்ந்தது. எம்.ஜி.ஆர். திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமாவார். இவர் தங்கமணியை மணந்தார் இவர் நோய்க்காரணமாக இறந்தார். அதன் பிறகு சதானந்தவதியை மணந்தார் இவரும் நோய்க் காரணமாக இறந்தார். பின்னர் இவர் வி.என்.ஜானகியை மணந்துக்கொண்டார். இவருக்கு பிள்ளைகள் கிடையாது.[3]

    திரைப்பட வாழ்க்கை

    1936 ல் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947 ல் அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை.
    தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார். இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம். ஆர். ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.
    இச்சம்பவத்திற்குப் பின்னார் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது.
    நல்ல குணங்கள் நிறைந்த கதா பாத்திரங்களையே தேர்வு செய்து நடித்தார். அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். பிரபல நாவலாசிரியர் அகிலன் எழுதி கல்கி இதழில் தொடராக வெளிவந்த கயல்விழி என்னும் புதினத்தின் அடிப்படையிலானது இது.
    தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார்: நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். இவற்றில் நாடோடி மன்னன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கியிருந்தார்.

    அரசியல் வாழ்க்கை


    இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார். அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேற வேண்டிய நிலையை ஏற்படுத்தின. 1972 ல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார்.
    திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின. 1977ல் இடம் பெற்ற தேர்தலில் பெரு வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984 ல் இவர் கடுமையாக நோய்வாய்ப்பட்டும், 1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். அவர் மறைவிற்குப் பின் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.
    இவர் கடவுள் நம்பிக்கையற்ற நாத்திகக் கொள்கையைப் பின்பற்றினாலும், தமிழ் நாட்டில் பலர் இவரைக் கடவுள் போலவே போற்றினார்கள்.[4] இவர் இறந்து, 22 ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்றும் இவருக்காகவே அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு வாக்களிப்பவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்.இது அவருக்கு மக்கள் மத்தியிலிருந்த அளவு கடந்த செல்வாக்கையே காட்டுகிறது.

    தமிழ் ஈழத்திற்கு உதவி

    பிரபாகரனை எம்ஜிஆர் தனது மகனைப் போலவே கருதி உதவி செய்தார். அதோடு தமிழர்களுக்கென்று பிரபாகரன் தலைமையில் தனி நாடு அமைய வேண்டுமென்றும் அவர் விரும்பினார் என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் கூறியுள்ளார். தமிழக முதல்வர் எம்ஜிஆருக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையே இருந்த பிணைப்பு மற்றும் ஈழப் போராட்டத்துக்கு எம்ஜிஆர் அளித்த நிபந்தனையற்ற வெளிப்படையான ஆதரவு போன்றவை உலகமறிந்தது.
    புலிகளின் போராட்டம் வெல்ல தேவையான ஆயுதங்கள் வாங்க ரூ.7 கோடி சொந்தப் பணத்தை எந்த நெருக்குதல் பற்றியும் கவலைப்படாமல் உலகறியத் தந்தவர் எம்ஜிஆர். உயிர் பிரிவதற்கு ஒரு வாரம் முன்புகூட ரூ. 40 லட்சம் வரை புலிகளுக்கு உதவியாக வழங்கியதாக பிரபாகரனே கூறியுள்ளார். இத்தனைக்கும் அந்த சமயத்தில் இந்திய அமைதி காப்புப் படை வட இலங்கையில் நிலை கொண்டிருந்தது.

    அன்ரன் பாலசிங்கம்

    அன்ரன் பாலசிங்கம்
    விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியர்

    பிறப்பு மார்ச் 4, 1938
    கரவெட்டி, யாழ்ப்பாணம், இலங்கை
    இறப்பு டிசம்பர் 14, 2006
    லண்டன்
    பணி விடுதலைப் புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளர்
    துணைவர் அடேல் ஆன்
    பெற்றோர் குழந்தைவேலு மார்க்கண்டு
    அன்ரன் பாலசிங்கம் (அன்டன் பாலசிங்கம் (மார்ச் 4, 1938 - டிசம்பர் 14, 2006 )விடுதலைப் புலிகளின் தத்துவாசிரியராக அறியப்பட்டவர். இவர் இங்கிலாந்து குடியுரிமைடைக் கொண்ட இலங்கைத் தமிழராவார். இலங்கை அரசுடன் நடத்தப்பட்ட பெரும்பாலான பேச்சுவார்த்தைகளில் ஆரம்பம் முதல் பெப்ரவரி 22-23 இல் ஜெனிவாவில் நடைபெற்ற , ஜெனிவா முதல் சுற்றுப் பேச்சுவார்த்தை வரை விடுதலைப் புலிகளின் குழுவுக்கு தலைமை தாங்கி வந்தார். இங்கிலாந்தின் இலண்டன் சௌத் பேன்ங்க் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டம் பெற்ற இவருக்கு வேறு பல கல்வி நிலையங்களும் கௌரவ பட்டங்களை அளித்துள்ளன.

    பொருளடக்கம்

    • 1 வாழ்க்கை வரலாறு

      • 1.1 ஆரம்ப வாழ்க்கை
      • 1.2 மணவாழ்க்கை
      • 1.3 விடுதலைப்புலிகளுடன் தொடர்பு
      • 1.4 உடல் நிலை பாதிப்பு
      • 1.5 மறைவு
    • 2 தேசத்தின் குரல் விருது
    • 3 அன்ரன் பாலசிங்கத்தின் மிதவாத போக்கு

    வாழ்க்கை வரலாறு 

    ஆரம்ப வாழ்க்கை

    ஆரம்பக்காலத்தில் இலங்கையின் வீரகேசரியின் பத்திரிகையாளராக பணியாற்றிய பாலசிங்கம் பின்னர் கொழும்பின் பிரித்தானிய தூதரகத்தில் மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். இங்கு பிரித்தானிய தூதரகத்தில் 10 ஆண்டுகள் கடமையாற்றியாதனால் இங்கிலாந்து குடியுரிமை பெற்றார்.

    மணவாழ்க்கை

    அவுஸ்திரேலியரான அடேல் ஆன்னை இலண்டனில் இவரது முதல் மனைவி இறந்த பின் காதல் திருமணம் செய்துக்கொண்டார்.

     விடுதலைப்புலிகளுடன் தொடர்பு

    1970களில் பாலசிங்கம் இங்கிலாந்தில் இருந்து எழுதிய கெரில்லாப் போர் முறை குறித்த நூலை வாசித்த புலிகள் இயக்கத் தலைவர் பிரபகரன் பாலசிங்கத்துடன் தொடர்புக் கொண்டதன் மூலம் பாலசிங்கத்துக்கு புலிகள் அமைப்புடன் தொடர்புகள் ஏற்பட்டது. பின்னர் பாலசிங்கம் இந்தியாவில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் போராளிகளுக்கு அரசியல் வகுப்புகளை நடத்தும் போது பிரபாகரனுடனான தொடர்பு மேலும் வளர்ந்தது. 1983, கறுப்பு யூலைக்குப் பிறகு இங்கிலாந்தில் இருந்து வெளியேறிய பாலசிங்கம் தம்பதியினர் இந்தியாவுக்கு குடிப் பெயர்ந்தனர்.
    1985, திம்பு பேச்சுவார்த்தையில் பேச்சுவார்த்தைக் குழுவுக்கு ஆலோசகராக செயலாற்றிய பாலசிங்கத்தின் நிலை காலப்போக்கில் புலிகள் இயக்கத்தில் பாலசிங்கத்தின் நிலை உயர்ந்து புலிகளின் தலைமை பேச்சுவார்த்தையாளராகவும் அரசியல் ஆலோசகராகவும் உயர்ந்த அதேவேளை பிரபாகரனின் நெருங்கிய நண்பராகவும் மாறினார்.
    ஏப்ரல் 2002 இல் இலங்கை அரசுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடும் முன்னர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அத்திபூத்தாற் போல் எப்போதாவது ஒரு சில தடவையே நடைபெறும் பத்திரிகையாளர் மகாநாட்டில் கலந்து கொண்டு மொழி பெயர்ப்பு உதவிகளையும் செய்தார்.

    சுவிஸ் துக்க நாள்

    உடல் நிலை பாதிப்பு

    2000 ஆம் ஆண்டு நீண்ட காலமாக இருந்த நீரிழிவு நோய் காரணமாக அவரது இரண்டு சிறுநீரகங்களும் செயலிழந்துப் போனதால் சிறுநீரக மாற்று சிகிச்சை செய்யப்பட்டது. இதன் பிறகு அவருக்கு கொடுக்கப்பட்ட சக்திவாய்ந்த மருந்துகளின் பக்க விளைவாக, 2006 நவம்பர் மாதம் வயிறு, ஈரல், சுவாசப்பை, எலும்பு மச்சைகள் போன்ற உடலின் முக்கிய அவயவங்கள் எங்கும் புற்று நோய் பரவியுள்ளதை இங்கிலாந்தில் வைத்தியர்கள் உறுதி செய்தனர்.[3][4].

    மறைவு

    தொடர்ச்சியாக வைத்திய பராமரிப்பில் இருந்துவந்த கலாநிதி அன்டன் பாலசிங்கம் டிசம்பர் 14, 2006 அன்று தனது 68வது வயதில் லண்டனில் காலமானார்.

    தேசத்தின் குரல் விருது

    மறைந்த அன்ரன் பாலசிங்கத்துக்கு "தேசத்தின் குரல்" எனும் கௌரவத்தை தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அறிவித்துள்ளார்.

    அன்ரன் பாலசிங்கத்தின் மிதவாத போக்கு

    அன்ரன் பாலசிங்கம் முதலில் மார்க்சிய வாதியாக இருந்தவர். பின்னர் அதில் இருந்து தன்னை விலக்கி, ஈழத் தமிழ்த் தேசியத்தை வரையறை செய்பவர்களில் ஒருவரானார். தமிழீழ விடுதலைப் புலிகளில் கற்றறிவு, அனுபவ அறிவு, ஆங்கில மொழி அறிவு, மிதவாதத் தன்மை , வெளிஉலக பார்வைத் தொடர்பு, நகைச்சுவை உணர்வு ஆகியவற்றைக் கொண்ட ஒரு மிக முக்கியத் தலைவராக விளங்கினார். முற்போக்கான, மேற்குலகைப் புரிந்த ஆளுமையாக பிபிசி ஆய்வாளர்கள் இவரின் முக்கியத்துவத்தை பற்றிய ஆய்வில் சுட்டிக் காட்டியுள்ளனர் . இறுதி வரைக்கும் ஆயுதங்களை பயன்படுத்தாத தமிழீழப் போராளியாக தமிழீழ விடுதலைப் புலிகளுக்குள் இருந்து செயலாற்றியதும் இவரின் மிதவாத போக்குக்கு இன்னுமோர் எடுத்துக்காட்டு ஆகும்.
    இலங்கையின் நாளேடு ஒன்றின் கருத்துப்படி, விடுதலைப் புலிகளை பேச்சுக்கு கொண்டு வருவதில் முக்கியப் பங்காற்றி வந்ததோடு 2002 இல் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்த்ததுக்கு பாலசிங்கம் உழைப்பு முக்கியமானதாகும். புலிகள் இயக்கத்தில் உள்ள தீவிரவாத கருத்துள்ள தலைவர்களிடமிருந்து புலிகளை மீட்டு அரசியல் தீர்வுகளுக்கு இட்டுச் செல்ல முனைந்த முக்கியத் தலைவராவார்.
    ------------------------------------